உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை பொதுஇடங்களில் வைக்க கோரிக்கை

மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்களை பொதுஇடங்களில் வைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி :பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், 'மஞ்சப்பை' வழங்கும் இயந்திரங்களை வைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, கிருஷ்ணகிரி நகரில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், 10 ரூபாய்க்கு துணிப்பையை வழங்கும், 'மஞ்சப்பை' இயந்திரங்களை வைக்க, கடந்த மே, 9ல் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை, 3ல் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் மட்டும் ஒரு, 'மஞ்சப்பை' இயந்திரம் வைக்கப்பட்டது. இயந்திரம் உள்ளே வைத்துள்ளதால், பொதுமக்கள் இந்த இயந்திரத்தை மிகவும் குறைவாகவே பயன்படுத்துவதால், இயந்திரம் வைத்ததின் நோக்கம் நிறைவேறவில்லை. மாறாக, இந்த 'மஞ்சப்பை' வழங்கும் இயந்திரத்தை, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காய்கறி மார்க்கெட், ரவுண்டானா, காந்திசாலை உழவர் சந்தை, பழையபேட்டை மீன் மார்க்கெட் போன்ற பகுதி களில் வைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ