உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 8 பேருக்கு காப்பு

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 8 பேருக்கு காப்பு

ஓசூர், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டல்பட்டி அருகே கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 30. ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் தங்கி, தனியார் நிறுவனத்தில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது-. இதில் நேற்று முன்தினம் ஜோதிபுரத்தில் உள்ள பால் பண்ணை அருகே வைத்து ராஜேசை மர்ம நபர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்படி, ஓசூர் தொரப்பள்ளியில் தங்கி, தனியார் பால் டைரியில் மேலாளராக உள்ள, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிவனஹள்ளியை சேர்ந்த முருகேஷ், 32, அருண்குமார், 29, சிவா, 29, நவீன்குமார், 20, பவன், 20, சுரேஷ், 21, 18, 17 வயது சிறுவர்கள் இருவர் என மொத்தம், 8 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ