உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்னாள் ராணுவ வீரரை தாக்கியவருக்கு காப்பு

முன்னாள் ராணுவ வீரரை தாக்கியவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கால்வேஹள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர், 40, முன்னாள் ராணுவ வீரர். இவர், மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் ஆற்றுக்கரையோரம் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த, 29ல் சென்றார். அப்போது தான் ஓட்டி வந்த காரை கோவில் அருகே நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேட்டை சேர்ந்த ராஜா, 45, என்பவர், 'இது கார் பார்க்கிங் ஏரியா, இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்,' எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ராஜா தரப்பினர் ராஜசேகரை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ராஜசேகர் புகார் படி, பாரூர் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !