உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கறுப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறையினர் பணி

கறுப்பு பேட்ஜ் அணிந்து வருவாய்த்துறையினர் பணி

தேன்கனிக்கோட்டை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 25ம் தேதி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை புறக்கணித்து, வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அவசர உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி தாலுகாவில் பணியாற்றும் வருவாய்த்துறையினர், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். இன்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ