மேலும் செய்திகள்
வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
20-Jun-2025
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட, கோட்டப்பட்டி வருவாய் கிராமத்தில், மாதன் என்பவர் வருவாய் கிராம உதவியாளராக பணி செய்து வருகிறார். இவரை கடந்த, 23ல் புலியூரை சேர்ந்த விவசாயி சக்திவேல், 55, என்பவர் தாக்கினார். இதுகுறித்து, பாரூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில், கடந்த, 24ல் போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆனால் தற்போது வரை அவரை கைது செய்யாமல், பாரூர் போலீசார் காலம் கடத்தி வருவதாக கூறி, நேற்று, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் வேடி உள்ளிட்டோருடன், 10க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் எதிரில், பாரூர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதையறிந்த பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், வருவாய் கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர்களிடம், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சம்மந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.
20-Jun-2025