மேலும் செய்திகள்
யானை கூட்டத்தால் பயிர்கள் நாசம்
25-May-2025
தளி, தளி அருகே, நெற்பயிர்களை ஒற்றை யானை நாசம் செய்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளி காப்புக்காட்டில், ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வனத்தை விட்டு வெளியேறி, தேவிரபெட்டா, கீஜனகுப்பம், கொட்டபாலம் ஆகிய கிராமங்களில் சுற்றித்திரிந்து, கீஜனகுப்பத்தில் விவசாயி லட்சுமணன் என்பவரது நெல் வயலில், பயிரை நாசம் செய்தது.அதை வனத்துறையினர், பட்டாசு வெடித்து தளி வனத்திற்குள் விரட்டினர். யானையால் சேதமான பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க, விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். ஒற்றை யானையால் தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், அதை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-May-2025