மேலும் செய்திகள்
யானை தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் சாலை மறியல்
24-Sep-2024
விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யவலியுறுத்தி சடலத்துடன் சாலை மறியல்போச்சம்பள்ளி, அக். 18-போச்சம்பள்ளி அடுத்த, சாலமரத்துப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, எஸ்.சந்துாரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 49. இவர், அதே பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் போச்சம்பள்ளிக்கு சென்று விட்டு இரவு, 7:00 மணிக்கு பஸ்சில் வீடு திரும்பினார். கும்மனுார் பஸ் ஸ்டாப்பில் இறங்கி சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். கல்லாவி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்தனர். இந்நிலையில், இறந்த கிருஷ்ணனின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி, போச்சம்பள்ளி சிப்காட்டிலிருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில், சாலமரத்துப்பட்டி பகுதியில் நேற்று மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, கிருஷ்ணனின் சடலத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், கல்லாவி பொறுப்பு இன்ஸ்பெக்டர் முருகன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
24-Sep-2024