உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

சாலை பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா-ளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கறுப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார். செயலாளர் திம்-மராஜ் கோரிக்கை குறித்து பேசினார். ஒப்பாரி போராட்டத்தில், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கா-லமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை, 140ஐ ரத்து செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சா-லைகள் அனைத்தையும் தமிழக அரசு நிர்வகிக்க வேண்டும் என்-பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை