மேலும் செய்திகள்
கூடலுார் தொகுதியில் ரூ. 7.28 லட்சம் பறிமுதல்
17-Mar-2026
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட பகுதிகளில் உரிய ஆவ-ணமின்றி கொண்டு சென்ற, 33.63 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படையினர், நிலையான கண்-காணிப்பு குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டு ஆவணமின்றி கொண்டு செல்-லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.அதன்படி பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட பசவண்ணகோவில் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில், ஆந்திர மாநிலம் சித்-துாரை சேர்ந்த லட்சுமிபதி, 52 என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த, 2.59 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்-பட்டது.* காளிக்கோவில் சோதனைச்சாவடி அருகே, காரில் வந்த, கர்நா-டக மாநிலம், கோலார் மாவட்டத்தை சேர்ந்த சஹிர் அகமத், 54, என்பவரிடம், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது.* கிருஷ்ணகிரி தொகுதிக்கு உட்பட்ட குப்பம் சாலை சமத்துவ-புரம் அருகே காரில் வந்த, ஆந்திர மாநிலம், கெம்மாகலப்பள்ளி சேர்ந்த ரவி, 44, என்பவரிடம், 1.86 லட்சம் ரூபாய், அதே இடத்தில் பிக்கப் வேனில் வந்த, கரூரை சேர்ந்த சந்துரு, 32, என்-பவரிடம், 1.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி அருகே காரில் வந்த, கர்நாடக மாநிலம் கொப்பாபுரம் முரளி, 53, என்பவரிடம், 1.95 லட்சம் ரூபாய், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே காரில் வந்த, பெங்களூருவை சேர்ந்த உஷா, 40 என்பவரிடம், 4.50 லட்சம் ரூபாய், மற்றொரு காரில் வந்த பெங்களூரு, சதாசிவம் நகர், வாசுதேவமூர்த்தி, 50, என்பவரிடம், 5.5-0 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* அகரம் ரோடு மேம்பாலம் அருகே காரில் ஆவணமின்றி எடுத்து சென்ற, பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ், 30, என்பவ-ரிடம், 7.48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதே-போல கம்பம்பள்ளி அருகே காரில் வந்த ஆந்திர மாநிலம் வி.கோட்டாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணா,40,- என்பவரிடம், 75,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* ஊத்தங்கரை அருகே கதவணி டோல்கேட் பகுதியில் காரில் சென்ற சரத்குமார் என்பவரிடம், 83,000 ரூபாய், காரப்பட்டு பஸ் ஸ்டாப் அருகே பிக்கப்வேனில் சென்ற ஆறுமுகம் என்பவரிடம், 81,600 ரூபாய் மற்றும் ஓலப்பட்டி தனியார் நிறுவனம் அருகே காரில் சென்ற ஏழுமலை என்பவரிடம், 2.50 லட்சம் என மொத்-தமாக, 4.14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* பென்னாகரம் அருகே, காரில் உரிய ஆவணமின்றி, கோடல்-பட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கொண்டு சென்ற, 53,500 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்-தனர்.* பாப்பிரெட்டிப்பட்டியில், அரூர் - ஒடசல்பட்டி ரோட்டில், கம்பைநல்லுார் - சாமியாபுரம் நோக்கி ஹீரோ பேஷன் புரோ பைக்கில் வந்த, அடிமலைபுதுாரை சேர்ந்த அஜித்குமார், 29, வினோத், 24, ஆகியோர் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற மொத்தம், 72,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
17-Mar-2026