தனியார் ஊழியரிடம் ரூ.6 லட்சம் அபேஸ்
கிருஷ்ணகிரி: மொபைல் போனை உறவினரிடம் கொடுத்து விட்டு வெளியூர் சென்றிருந்த ஓசூர் தனியார் நிறுவன அதிகாரியிடம், 6 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் சதீஷ், 50. தனியார் நிறுவன அதிகாரி. இவர் கடந்த மாதம், 6ல் வெளியூர் பயணம் மேற்கொண்டார். இதற்காக தன் மொபைல் போனை உறவினரிடம் கொடுத்து விட்டு சென்றார். வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பிய அவர், மொபைல் போனை வாங்கி பார்த்தபோது, அதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்த, 6 லட்சம் ரூபாய், அபேஸ் செய்யப்பட்டிருந்தது. அப்பணத்தை யார் எடுத்தார்கள் என தெரியவில்லை. இது குறித்து சதீஷ் புகார்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரி விசாரித்து வருகிறார்.