உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்கிருஷ்ணகிரி,:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி செயலர் பதவி உள்பட அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.பட்டு வளர்ச்சித்துறை மாநில பொருளாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், பி.டி.ஓ.,க்கள் முருகன், குமரேசன், வட்டார வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற, 69 பேரை போலீசார் கைது செய்தனர்.* தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 55 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை