உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தனியார் பள்ளி மாணவி, பாலியல் பலாத்-கார சம்பவத்தை கண்டித்து, மாதர் சம்மேளனம், இளைஞர் பெரு-மன்றம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ண-கிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இந்திய மாதர் தேசிய சம்மே-ளனம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆக., 8 இரவு, என்.சி.சி., முகாம் நடத்துவதாக மாணவியை அழைத்துச் சென்று சிவராமன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இந்த வன்கொடுமைக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு. மேலும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், முழு பொறுப்பை ஏற்க வேண்டும். பள்ளி நிர்வா-கத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்-பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதில், மாதர் சங்க சம்மேளனம் தேசிய குழு உறுப்பினர் சுந்தர-வள்ளி, இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் ஆதில், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நிருப் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ