உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெய் தலைமை வகித்தார். இதில், தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியில், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை முதல்வர் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகிற செப்., மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆயத்தப்படுத்தும் வகையில், உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. மேலும் தேர்தல் வாக்குறுதியின்படி, 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை,வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை