உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்

ஓசூர்:கெலமங்கலத்தில், குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., 11 வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில், 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அப்பகுதியில், 25 ஆண்டுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டது. இதன் அருகே கழிவு நீர் கால்வாய் செல்வதால், கடந்த சில மாதங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீடுகள் மற்றும் தெரு குழாய்களில் தொடர்ந்து கழிவு நீருடன் குடிநீர் வருவதால், மக்கள் என்ன செய்வது என தெரியாமல் அவதியடைகின்றனர்.குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே காந்தி நகர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும், கழிவு நீருடன் கலந்து வருவதால், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் இதுவரை செய்யப்படவில்லை. அதனால், போர்வெல் குடிநீரை மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். அதுவும் மோசமான நிலையில் வருவதால், மக்கள் பாடு திண்டாட்டமாகியுள்ளது. மக்களுக்கு தொற்று நோய் பரவும் முன் நடவடிக்கை எடுத்து, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ