உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடுகளை திருடி வந்தவர் சாலை விபத்தில் சிக்கினார்

ஆடுகளை திருடி வந்தவர் சாலை விபத்தில் சிக்கினார்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, தொப்படிகுப்பத்தை சேர்ந்தவர் சண்முகம், 52. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தன் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், சந்துார் அடுத்த, தட்டக்கல் பகுதியில், 2 ஆடுகளை சாக்கு பையில் போட்டு கட்டிக்கொண்டு போதையில் வந்துள்ளார். அப்போது, சாலையின் ஓரமுள்ள விவசாய நிலத்தின் வேலியில் சிக்கினார். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில், அந்த வழியாக வந்தபோது, காயமடைந்த சண்முகத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். சாக்குப்பையை பிரித்து பார்த்தபோது, அதில், 2 ஆடுகள் இருந்தன. ஆடுகள் மற்றும் டி.வி.எஸ்., விக்டர் வாகனத்தை போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். விசாரணையில், 2 ஆடுகளையும் திருடி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் வழியில், அளவுக்கு அதிகமான குடிபோதையில் சண்முகம் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. ஆடுகள் யாருடையது என்பதை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி