உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு

3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு

அஞ்செட்டி: மூன்று மாதங்களுக்கு முன் மாயமான தொழிலாளி, எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் முருகேசன், 46; கூலித்தொழிலாளி. இவர், தன் தந்தை மாதப்பனிடம், சொத்தை பிரித்து தர கேட்டு தகராறு செய்து வந்தார். பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த முருகேசன், ஜூன், 14ம் தேதி மாலை, தன் தந்தை வளர்த்து வரும் ஆடு, மாடுகள் குடிக்கும் தொட்டியில், யூரியாவை கலந்தார். அதை குடித்த, 9 ஆடுகள் மற்றும் இரு மாடுகள் உயிரிழந்தன. அஞ்செட்டி போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த முருகேசன் ஜூலை, 17ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி புகாரின்படி, அஞ்செட்டி போலீசார், முருகேசனை தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மரியாளம் வனப்பகுதியில், தோழிகுண்டு பாறையில் ஆண் எலும்புக்கூடு துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், முருகேசன் என்பதை இந்திராணி உறுதி செய்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. முருகேசன் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை