உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: ராணுவ வீரர் குடும்பம் புகார்

ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு: ராணுவ வீரர் குடும்பம் புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கங்கலேரி பஞ்., பனமரத்துப்பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43; ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்தவர், குடும்பத்தினருடன் ராணுவ சீருடையில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். மனு விபரம்: எங் கள் மூதாதையரின் மூன்றரை ஏக்கர் நிலத்தில், எனக்கு வாய்வழியாக ஒதுக்கப்பட்ட முக்கால் ஏக்கர் நிலம், என் சுவாதீனத்தில் உள்ளது. அதை ஏற்க மறுத்து மீண்டும் பாகப்பிரிவினை செய்ய, ஒரு தரப்பினர் பிரச்னை செய்கின்றனர். நேற்று முன்தினம், என் மீது கல்வீசி கொல்ல முயன்றனர். ஊர் பெரியவர்கள், போலீசில் முறையிட்டும் பலனில்லை. எங்கள் குடும்பத்தை ஓராண்டாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, எங்கள் வீட்டுக்கு தண்ணீர் கூட வழங்குவதில்லை. ராணுவத்தில் பணிபுரியும் என் குடும்பத்துக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீதும், குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை