உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணராயபுரம் யூனியனில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணராயபுரம் யூனியனில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் வல்லம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டுகளில் மழைநீர் சேகரிப்பு குளம் அமைத்தல், துாய்மை பணி செய்தல், கொசு ஒழிப்பதற்காக பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு குறித்து தணிக்கை செய்தல் உள்பட பல தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.* கள்ளப்பள்ளி பஞ்சாயத்து சார்பில், சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் குடிநீர் பிரச்னை குறித்து பேசப்பட்டது. மேலும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. யூனியன் தனி அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* இதேபோல் வயலுார், கருப்பத்துார், சிவாயம், சிந்தலவாடி, மகாதானபுரம், கம்மநல்லுார், மாயனுார், மணவாசி பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !