நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 1,740 பேருக்கு சிகிச்சை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கூறியதாவது:ஓசூர் மாநகராட்சி, பாகலுார், தளி, கெலமங்கலம், ஆலப்பட்டி, சூளகிரி, வேப்பனஹள்ளி, பர்கூர், மத்துார் மற்றும் சிங்காரப்பேட்டை பகுதிகளை தொடர்ந்து, ஊத்தங்கரையிலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்துள்ளது. 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 1,740 பேர் சிகிச்சை பெற்றனர். பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 55 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 31 பேருக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.