நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்-பட்டி ஆறுச்சாமி, பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தலைமை வகித்து, 117 துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள், கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, துாய்மை பணியாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு தலா, 50,000 ரூபாய் கடனுதவி, 62 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, வீல் சேர் என மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்பி-லான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தாட்கோ மேலாளர் வேல்முருகன், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவி அம்சவேணி, கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, மாவட்ட சுகாதார அலு-வலர் ரமேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முரு-கேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.