உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூளகிரியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

சூளகிரியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (செப்., 13) காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு அனைத்து உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.மேலும் தொற்றா நோய், உயர் ரத்த அழுத்தம், கண் பார்வை, சிறுநீரகம், இதயம், நரம்பியல், சித்த மருத்துவம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட, 17 வகையான பரிசோதனைகள், சிறப்பு டாக்டர் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை