நலம் காக்கும் ஸ்டாலின் வேலம்பட்டியில் முகாம்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோ-ஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை பர்கூர், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., மதியழகன் துவக்கி வைத்தார். இதில் எக்ஸ்ரே, கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட தொற்று நோய் நிபுணர் கார்த்திக், கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லுாரி முதல்வர் சத்யபாமா மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு-வலர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் நித்யா மற்றும் மருத்துவர்கள் மஞ்சுநாதன், கவின் உள்ளிட்ட சுகாதார துறை செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில், 1,000க்கும் மேற்-பட்டோர் பயன் பெற்றனர்.