உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜூடோவில் மாநில முதலிடம்: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

ஜூடோவில் மாநில முதலிடம்: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

ஜூடோவில் மாநில முதலிடம்: அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டுபாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் அசுரன், 17. இவர், தர்மபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் பள்ளிகளுக்கிடையே நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில் முதலிடம் பெற்றார். இவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அரசால் வழங்கப்பட்டது.மேலும் தேசிய அளவில் விளையாட தகுதி பெற்றார். இம் மாணவரை தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பாராட்டி, பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை