மேலும் செய்திகள்
சண்முகா கபடிக்குழு முதலிடம்
05-Nov-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கழகத்துடன் இணைத்து, கிருஷ்-ணகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் நடத்திய, தமிழ்நாடு அளவிலான, 51வது ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடந்தது. கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவங்கி வைத்-தனர். மூன்று நாள் நடக்கும் போட்டியில் மாநிலத்தில் இருந்து, 38 கபடி அணியினர் கலந்து கொண்டனர். மேலும் இந்திய அளவிலான கபடி அணியில், துணை கேப்ட-னாக இருந்து, துபாய் நாட்டில் பெக்ரைன் நகரத்தில் நடந்த சர்வ-தேச கபடி போட்டியில், பெண்கள் அணியில் தங்கம் வென்ற கார்த்திகா மற்றும் ஆண்கள் அணியில் தங்கம் வென்ற அபினேஷ் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி கவுரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கபடி கழக மாநில தலைவர் சோலைராஜா, மாநில செயலாளர் சபியுல்லா, சேர்மன் பாண்டியன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் குமார், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சக்-கரவர்த்தி மற்றும் விக்ரமன் உள்ளிட்ட கபடி கழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
05-Nov-2025