மேலும் செய்திகள்
திண்டிவனத்தில் ஆலை 'டாபர் இந்தியா' மும்முரம்
12-Dec-2024
சென்னை: இரு சக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், 'ஸ்டீல்பேர்டு' நிறுவனம், கிருஷ்-ணகிரி மாவட்டம் ஓசூரில், 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. மாதத்துக்கு 6 லட்சம் ஹெல்மெட்களை உற்பத்தி செய்யும் திறன் உடையதாக, இந்த ஆலை இருக்கும். தற்போது, ஸ்டீல்பேர்டு நிறுவனத்துக்கு உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் ஹிமாச்ச-லில் தொழிற்சாலைகள் உள்ளன. ஓசூர் ஆலையில், முதல்கட்ட-மாக தினசரி 20,000 ஹெல்மெட்களை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆலை வாயிலாக, கிட்டத்தட்ட 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ஸ்டீல்பேர்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் கபூர் தெரிவித்தார். சாலை விபத்துகளை தடுக்க, இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்-னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தி-ருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அதிக தொகையை போக்குவ-ரத்து போலீசார் அபராதமாக விதிக்கின்றனர். இதனால், ஹெல்-மெட்டின் தேவை மற்றும் பயன்பாடு அதிகரித்து வரும் நிலை-யில், ஓசூரில் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் ஆலை அமைகிறது. வரும், 2030ம் ஆண்டுக்குள் தனது மொத்த வருவாய் இலக்கான 2,500 கோடியில், தென்னிந்தியாவில் இருந்து 500 கோடியை ஸ்டீல்பேர்டு நிறுவனம் எதிர்பார்க்கிறது.
12-Dec-2024