உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ஐ.டி., நிறுவனங்கள் வர நடவடிக்கை:பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

ஓசூரில் ஐ.டி., நிறுவனங்கள் வர நடவடிக்கை:பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ம.க., பொதுக்குழு கூட்டம், ஓசூர் சூடப்பா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., சேலம் மேற்கு - எம்.எல்.ஏ., அருள், மாநில பொதுச்செயலாளர் முரளிசங்கர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், ஓசூர் ஜூஜூவாடியிலிருந்து பேரண்டப்பள்ளி வரை, அவுட்டர் ரிங்ரோடு அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும். பெங்களூரு விமான நிலைய ஆணையத்தின் விதிகளை தளர்த்தி, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.கர்நாடகா - ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை துவங்க, கர்நாடகா அரசிற்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். ஓசூர் எல்காட் வளாகத்தில், பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்கள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஓசூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உட்பட மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன், மாநில துணைத்தலைவர் சுரேஷ்ராஜன், மேற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை