உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  மாணவி தற்கொலை முயற்சி :ஏமாற்றிய காதலன் மீது வழக்கு

 மாணவி தற்கொலை முயற்சி :ஏமாற்றிய காதலன் மீது வழக்கு

ராயக்கோட்டை: காதலித்து ஏமாற்றியதால் கல்லுாரி மாணவி தற்கொலைக்கு முயன்ற வழக்கில், அவரது காதலன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண். தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் மூன்றாமாண்டு படிக்கிறார். ராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், 24. இருவரும் காதலித்தனர். மாணவி, நவ., 29ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராயக்கோட்டை போலீசில், நேற்று முன்தினம் மாணவி அளித்த புகாரில், வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொண்டதாகவும், பின், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, வெங்கடேஷ் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ