உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தை பெற்ற மாணவி காரணம் குறித்து மவுனம்

குழந்தை பெற்ற மாணவி காரணம் குறித்து மவுனம்

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவிக்கு கடந்த, 23ல் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து போச்சம்பள்ளி மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியதை அடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவிக்கு அறுவை சிகிச்சை வாயிலாக ஆண் குழந்தை பிறந்தது. மாணவி கர்ப்பத்திற்கு காரணமான நபரை பற்றி எந்த தகவலும் கூறாமல், மாணவி மவுனம் காத்து வருவதால், மத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை