மேலும் செய்திகள்
சோமங்கலத்தில் மின்தடை அடிக்கடி தொடர்வதால் அவதி
23-Oct-2024
போச்சம்பள்ளி, நவ. 3-போச்சம்பள்ளி அடுத்த, அகரம், ஆவத்துவாடி, குடிமேனஹள்ளி, செல்லம்பட்டி, பேரூஹள்ளி, நாகோஜனஹள்ளி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. காலை மற்றும் இரவில், 2 முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும், அதேபோல் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Oct-2024