உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி

விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை வட்டாரத்தில் வேளாண் துறை அட்மா திட்டத்தில், சந்திரப்பட்டி பஞ்., வேடப்பட்டி கிராம விவசாயிகளுக்கு, கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா தலைமை வகித்தார். பயிற்சியில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்ந்த மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு செய்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது. கரும்பு அபிவிருத்தி அலுவலர் வேடியப்பன், திருப்பத்துார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கரும்பு சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறை மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.கரும்பு அலுவலர் வெற்றிவேந்தன் கரும்பில் உயர் அதிக மகசூலுக்கு உன்னதமான வழிகள் குறித்தும் நிடித்த நவீன கரும்பு சாகுபடி கரும்பு கரணையை விதைநேர்த்தி செய்யும் முறை, உழவு, பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் மற்றும் ரகங்கள், நடவு முறை, உர மற்றும் களை நிர்வாகம், பாசன முறை பற்றி விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை