தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டம்
தமிழக நதிகள் இணைப்புவிவசாயிகள் சங்க கூட்டம்கிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரியில், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க, மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ராஜீ தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன் பேசினார்.கூட்டத்தில், எண்ணேகொள்புதுார் வாய்க்கால் திட்டத்தை போர்கால அடிப்படையில் நிறைவேற்றி, 2025ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் விவசாய கருவிகள், டிராக்டர், டில்லர், புல்கட்டும் கருவிகள், பொக்லைன் இயந்திரம் போன்ற விவசாயிகளின் இன்றைய தேவைக்கு ஏற்ப, தாமதமின்றி வழங்க வேண்டும்.கணவனை இழந்த அனைத்து பெண்களுக்கும் விதவை உதவித்தொகையை போர்கால அடிப்படையில் வழங்க வேண்டும். சப்பானிப்பட்டி முதல் எர்ரசீகலஅள்ளி செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாகவும், சகதியாகவும் உள்ளது. இதனை போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.