உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளத்தில் இறங்கிய டேங்கர் லாரி

பள்ளத்தில் இறங்கிய டேங்கர் லாரி

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாயக்கனுார் கிராமம் அருகே, கிருஷ்ணகிரி -- புதுச்சேரி தேசிய நெஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ஆசிட் டேங்கர் லாரி, அதிகாலை, 6:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. டேங்கர் லாரி காலியாக இருந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. விபத்தில் டிரைவர் லேசான காயமடைந்தார், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ