மேலும் செய்திகள்
ரூ.1.25 கோடியில் 7 வகுப்பறை
12-Aug-2025
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கும் புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் அன்னை ஏஞ்சலா தலைமை வகித்தார். ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, பள்ளி மாணவியர் ஒன்று சேர்ந்து, ஆசிரிய, ஆசிரியைகளை நீண்ட நேரம் பாடல்களை பாடி வாழ்த்தினர். அப்போது விழா திடலில் இருந்த மற்ற மாணவியர் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி, பள்ளியில் நுாலகம் அமைக்கும் வகையில், எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் நுாற்றுக்கணக்கான புத்தகங்களை வழங்கினர்.
12-Aug-2025