உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

குத்தகை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன், கீழ் மத்தூர், மகனூர் பட்டி கிராமம் கோவில் மடம், இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் சபாபதி தலைமை வகித்தார். ஊத்தங்கரை கீழ் மத்தூர், மகனூர்பட்டி கிராமங்களைச் சேர்ந்த குத்தகை விவசாயிகள், 200 ஏக்கர் நிலங்களில் இரண்டு தலை முறைகளாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம். குத்தகை பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கிட வேண்டும். வீடு கட்டி குடியிருக்கும் விவசாயிகளின் வீட்டு மனைக்கும் பட்டா வழங்க வேண்டும். வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். குத்தகை சாகுபடி செய்பவர்கள் பெயரில் அடங்கல் கணக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி