உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயி தற்கொலைக்கு தி.மு.க., செயலர் காரணம்?

விவசாயி தற்கொலைக்கு தி.மு.க., செயலர் காரணம்?

ஓசூர்:'என் சாவிற்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் காரணம்' என, கடிதம் எழுதி, விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை, ரஹ்மத் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 70; விவசாயி. இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது சட்டை பாக்கெட்டில், இரு கடிதம் இருந்தது. ஒன்றில் போலீசாருக்கு வழங்க வேண்டும் என்றும், மற்றொரு கடிதத்தில், தன் நண்பர் சரவணனிடம் தர வேண்டும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.கடிதத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர் ஒருவரது பெயரை குறிப்பிட்டு, அவர் தான் தன் சாவிற்கு காரணம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.உறவினர்கள் கூறுகையில், 'கிருஷ்ணன் சமீபத்தில் நிலம் விற்றது தொடர்பான வரவு, செலவு குறித்து பேச நேற்று முன்தினம் அவரை சிலர், தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அதன் பின் தான், கிருஷ்ணன் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ