சாலைக்கு வந்த யானைகள் பஸ்சை நிறுத்திய டிரைவர்
சாலைக்கு வந்த யானைகள்பஸ்சை நிறுத்திய டிரைவர்ஓசூர், அக். 27-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், ராகி, நெல், தக்காளி, பீன்ஸ் போன்ற பல்வேறு வகையான விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், தல்சூர் கிராமத்தின் வழியாக, தனியார் கல்லுாரிக்கு பஸ் சென்றது. அப்போது, திடீரென, 4 யானைகள் சாலைக்கு வந்தன. கல்லுாரி பஸ் டிரைவர் ஹரிஷ் பதற்றமடையாமல், சாதுர்யமாக, யானைகள் சாலையை கடக்கும் வரை பஸ்சை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அதனால் எந்த இடையூறும் செய்யாமல், யானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் மாணவ, மாணவியர் நிம்மதியடைந்தனர். சாலையை கடந்த யானைகள், அருகில் இருந்த ஏரியை நோக்கி சென்றன.