உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காட்டாற்றில் கயிறு கட்டி பால்கேன் எடுத்து சென்ற மலைவாழ் மக்கள்

காட்டாற்றில் கயிறு கட்டி பால்கேன் எடுத்து சென்ற மலைவாழ் மக்கள்

அரூர், டிச. 4- பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, சித்தேரி ஊராட்சியில், 62 மலைக்கிராமங்கள் உள்ளன. அதில், கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி, அக்கரகாடு, நைனான்வளவு, புளியமரத்துவளவு உட்பட, 8 கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அந்த கிராமங்களுக்கு வாச்சாத்தியில் இருந்து செல்லும், 7 கி.மீ., மண் சாலை கரடுமுரடாக உள்ளது. அச்சாலை குறுக்கே செல்லும் காட்டாற்றில், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.அரூர் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக, 'பெஞ்சல்' புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கடந்த, 3 நாட்களாக காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 8 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கறந்த பாலை கொண்டு செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று அப்பகுதி மக்கள், ஆற்றின் நடுவே கயிறை கட்டி, 3,500 லிட்டர் பாலை கேன்களில் எடுத்துக் கொண்டு, ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்துக் கொண்டு ஆற்றை கடந்து சென்றனர். பின், அதை மாலகபாடியிலுள்ள பால் கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ