/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதி சாலையில்
பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதி சாலையில்
வழிகாட்டி பலகை அபள்ளிப்பாளையம்,பள்ளிப்பாளையம் யூனியனில், 15 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், பெரும்பாலான பஞ்சாயத்துகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரிவு சாலைக்கு வழிகாட்டி பலகை இல்லை. இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் வருவோர் வழிமாறி செல்கின்றனர். பள்ளிப்பாளையம் யூனியனில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளுக்குநாள் குடியிருப்பும், தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால், பிரிவு சாலைகளில் வழிகாட்டி பலகை வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.