உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயம் செழிக்க ஊர் கூடி பொங்கல் வைத்து வழிபாடு

விவசாயம் செழிக்க ஊர் கூடி பொங்கல் வைத்து வழிபாடு

கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விவசாயம் செழிக்க ஊர்கூடி அதிகாலையில், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.தமிழகம் முழுவதும், நேற்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, நகர் புறங்களில் வசிப்போர் வீட்டின் மாடியில் கரும்பு, பானையுடன் பொங்கல் வைத்து சூரிய பொங்கல் கொண்டாடினர். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை அழைத்து, பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தும், பொங்கல் பரிமாறியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம பகுதிகளில், விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து குடும்பத்துடன் வீட்டின் வாசலில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட துரிஞ்சிபட்டியில், 50க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன், பொங்கல் பானையை ஊர்வலமாக கொண்டு வந்து அதிகாலையில் பொன் மாரியம்மன் முன் பொங்கலிட்டனர். தொடர்ந்து மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்று, தட்டு வரிசையுடன் படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை