உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுக்குறிக்கி பைரவர் கோவிலில் தேய்பிறை பைரவாஷ்டமி விழா

கல்லுக்குறிக்கி பைரவர் கோவிலில் தேய்பிறை பைரவாஷ்டமி விழா

கல்லுக்குறிக்கி பைரவர் கோவிலில்தேய்பிறை பைரவாஷ்டமி விழாகிருஷ்ணகிரி, நவ. 24-கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள, காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை பைரவாஷ்டமி மற்றும் 814ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நடந்தது.காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ ஹோமம் நடத்தப்பட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. தங்கக்கவச அலங்காரத்தில், கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், 12:00 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சண காலபைரவர் கோவிலில், தேய்பிறை பைரவாஷ்மியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி