உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாரியம்மன் கோவிலில்நாளை தேர்த்திருவிழா

மாரியம்மன் கோவிலில்நாளை தேர்த்திருவிழா

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இரண்டாவது வாரம் சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை விழா, மூன்று மாதங்களுக்கு முன் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.தினமும் பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு முன்புள்ள கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வணங்கி வந்தனர்.இந்நிலையில், நாளை இரவு பூ ஓடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. செவ்வாய்கிழமை அதிகாலை சாட்டையடி நிகழ்ச்சியும், புதன்கிழமை காலை தீ மிதிக்கும் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வெள்ளிக்கிழமை கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ