கிருஷ்ணகிரி, டிச. 24-கன்னியாகுமரியில் திருவள்ளுவரின், 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. வெள்ளி விழா கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட மைய நுாலகத்தில், திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு, திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.