தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் அணி திரள்வீர் பா.ஜ., பொறுப்பாளர் ராமலிங்கம் பேச்சு
கிருஷ்ணகிரி: ''தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் எல்லோரும் அணி திரண்டு அவர்களை வீழ்த்த வேண்டும்,'' என, பா.ஜ., சேலம் பெருங்-கோட்ட பொறுப்பாளர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.கிருஷ்ணகிரி, பா.ஜ., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், நேற்று மாவட்ட பா.ஜ., தலைவர் தேர்தல் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக கவியரசு தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ., சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே.பி., ராம-லிங்கம் புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த, 2014ல் பிர-தமர் மோடி ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்-களை அமல்படுத்தி வருகிறார். பல உலக நாடுகள் ஏற்றுக்கொள்-ளாத போதே, பட்ஜெட்டில் டிஜிட்டல் இந்தியாவை அறிவித்-தவர் மோடி. இன்று அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டும் அது-போல சிறப்பானதாக அமையும்.ஈ.வெ.ரா.,வை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.அவர் பேசிய பேச்சுக்களையும், நடந்த விதத்தையும்தான் அனைவரும் கூறி வருகின்றனர். அதைத்தான் சீமானும் பேசுகிறார். அவர் கூறு-வதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க.,வுக்கு பேசுவ-தற்கு எதுவுமில்லை. அதனால், ஈ.வெ.ரா.,வை வைத்து அரசியல் நடத்தி, ஓட்டை பெற முயற்சிக்கிறது.நெல்லிக்காய் மூட்டை போல சிதறி கிடக்கும் அனைத்து கட்சி-களையும் பா.ஜ., வரவேற்கிறது. 1967ல், காங்., கட்சியை ஒழிக்க, தி.மு.க.,வுடன் ராஜாஜி கூட்டணி வைத்தது போல், ராமதாஸ். சீமான், விஜய், என தி.மு.க.,வை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஓரணியாக திரள வேண்டும். சிதறும் ஓட்டுகளால், 22 சதவித ஓட்டை பெற்று வெல்லலாம் என்ற, தி.மு.க.,வின் கணக்கை முடித்து அவர்களை வீழ்த்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.