10ம் வகுப்பு மாணவியர் மூவர் மாயம்
போச்சம்பள்ளி:பள்ளிக்கு செல்வதாக கூறி 10ம் வகுப்பு மாணவியர் மூவர் மாயமாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். இதில், 10ம் வகுப்பு படித்து வரும், பாரண்டபள்ளியை சேர்ந்த, இரு மாணவியர், மேட்டுசூளகரையை சேர்ந்த மாணவி என, மூவர், நேற்று காலை அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை; வேறு எங்கு சென்றனர் என தெரியவில்லை. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை, சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோரிடம், மாணவியர் பள்ளிக்கு வராதது குறித்து, 'வாட்ஸாப்'ல் குறுஞ்செய்தி அனுப்பினார். அதிர்ச்சியடைந்த மாணவியரின் பெற்றோர், பல இடங்களில், மகள்களை தேடியும் கிடைக்காததால், போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மாணவியரை தேடி வருகின்றனர்.