| ADDED : ஆக 27, 2026 04:04 AM
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜீவன் பிரதாப், 28, சென்னையில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவ-னத்தில் பணிபுரிகிறார். கடந்த, 23ல் சிதம்பரத்தில் நடந்த நண்-பரின் திருமணத்திற்கு சென்று திரும்பினார். ஆம்னி பஸ்சில் வந்-தவர் இரவு, 11:00 மணியளவில் ஜெகதேவி பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். தன் நண்பர் ஹேம்நாத் என்பவருக்கு போன் செய்து பைக்கில் அழைத்து செல்ல கூறினார். அப்போது, எதிரில் வந்த மூன்று வாலிபர்கள், ஜீவன் பிரதாப்பை தாக்கி, அவரின் மொபைலை பறித்துக்கொண்டு தப்பினர். படுகா-யமடைந்த ஜீவன் பிரதாப்பை, அவர் நண்பர் ஹேம்நாத் பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து புகார் படி, பர்கூர் போலீசார் விசாரித்தனர்.இதில், அவரை தாக்கி மொபைலை பறித்து சென்றது ஜெகதேவி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேவாக், 23, ஜெய்பீம் நகர் லோகேஷ், 20, ஜே.ஜே.,நகர் கவுதம், 19 என தெரிந்தது. அவர்கள் மூவ-ரையும் நேற்று போலீசார் கைது செய்து, மொபைலையும் பறி-முதல் செய்தனர்.