மேலும் செய்திகள்
கற்களை கடத்திய 2 வாகனம் பறிமுதல்
13-Oct-2025
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பாரதி மற்றும் போலீசார், சூளகிரி அருகே ஒமதேப்பள்ளியிலுள்ள கே.டி.ஆர்., திருமண மண்டபம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், சூளகிரியிலிருந்து ஓசூருக்கு, 5 யூனிட் கற்களை ஏற்றி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Oct-2025