உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

த.மா.கா., உறுப்பினர் சேர்க்கைஆலோசனை கூட்டம்ஊத்தங்கரை, நவ. 19-ஊத்தங்கரையில், த.மா.கா., கட்சியின், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் குலோத்துங்கன், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் கான் பாய், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் நுாருல்லா ஷெரீப், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி மாலா, வட்டார தலைவர் தெற்கு அழகேசன், விவசாய அணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார நகர பொறுப்பாளர்கள் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை