ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில் புகையிலை இல்லாத இளைஞர் பிரசாரம் 3.0
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், 'புகையிலை இல்லாத இளைஞர் பிரசாரம் 3.0' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய சேவை திட்ட அதிகாரி பேராசிரியை பாக்கியலட்சுமி வரவேற்றார். தொழில்துறை உறவுகள், டீன் தனசேகரன் மற்றும் ஓசூர் மூத்த வக்கீல் சுபாங்கி செல்வகுமார் ஆகியோர், புகையிலை தீமைகள் குறித்து, மாணவ, மாணவியர், மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். மூத்த வக்கீல் சுபாங்கி செல்வகுமார், உறுதிமொழியை வழி நடத்தினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி பேராசிரியர் அசோக் நன்றி கூறினார்.