உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., சார்பில் இன்று அம்பேத்கர் பிறந்த நாள்

தி.மு.க., சார்பில் இன்று அம்பேத்கர் பிறந்த நாள்

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் இன்று (ஏப்.14) காலை, 9:00 மணிக்கு, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை