உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிராக்டர், 2 லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிராக்டர், 2 லாரிகள் பறிமுதல்

போச்சம்பள்ளி,மத்துார், கிருஷ்ணகிரி சாலையில், பர்கூர் பகுதியிலிருந்து முட்டு கற்கள், டாரஸ் லாரியில் நேற்று முன்தினம் இரவு எடுத்து வரப்பட்டது. அந்த வழியாக வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அனுமதியின்றி கற்கள் எடுத்துச்செல்வதை அறிந்து வாகனத்தை பறிமுதல் செய்து, மத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், நாகரசம்பட்டி அடுத்த, மருதேரியில், அனுமதியின்றி ஜல்லி கற்கள் எடுத்து வந்த டிராக்டரை, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா பறிமுதல் செய்து, நாகரசம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மருதேரி வி.ஏ.ஓ., தாமோதரன் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் காவாப்பட்டி அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற ஒரு டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. தாமோதரன் புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !